Books / ALPHA OMEGA
Featured (ONE STAR. THREE GIFTS. ONE MYSTERY.
ALPHA & OMEGA™
One Star. Three Gifts. One Mystery.
ஒரு நட்சத்திரம் வானத்தில் தோன்றுகிறது.
அதை மூன்று ஞானிகள் பார்க்கிறார்கள்.
மூன்று வெவ்வேறு பாதைகளில் தொடங்கிய அவர்களின் பயணம், ஒரே குழந்தையின் முன்னால் வந்து நிற்கிறது.
அவர்கள் கொண்டு வந்த மூன்று காணிக்கைகள் Gold, Frankincense, Myrrh வெறும் பரிசுகள் அல்ல.
ஒவ்வொரு காணிக்கையும் அந்தக் குழந்தையின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு மர்மத்தை சுமந்து வருகிறது.
Gold: Survival.
Frankincense: Truth.
Myrrh: Transformation.
ஆனால் ஒரு கேள்வி மட்டும் பல ஆண்டுகளாக பதிலின்றி நிற்கிறது:
“ஒரு குழந்தைக்கு ஏன் Myrrh?”
அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் பயணம், Bethlehem-இல் தொடங்கி பாலைவனங்கள், அரண்மனைகள், எகிப்து, Jerusalem, Temple, Galilee மற்றும் இறுதியில் ஒரு Empty Tomb வரை செல்கிறது.
மூன்று ஞானிகளின் பாதைகள் காலத்தால் பிரிக்கப்படுகின்றன.
ஒருவர் தனது காணிக்கையின் அர்த்தத்தை வாழ்வில் காண்கிறார்.
மற்றொருவர் தனது கேள்விக்கான பதிலைப் பெறுகிறார்.
இன்னொருவர் Balthasar முப்பத்து மூன்று ஆண்டுகள் காத்திருக்கிறார்.
அவன் கையில் இன்னும் ஒரு காணிக்கை இருக்கிறது.
Myrrh.
ALPHA & OMEGA™ என்பது வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றுக்கிடையே சொல்லப்படாத தருணங்களை கற்பனை மற்றும் cinematic storytelling மூலம் விரிவாக்கும் Biblical Historical-Spiritual Mystery.
இது ஒரு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்த மூன்று மனிதர்களின் கதை மட்டுமல்ல.
ஒரு பரிசின் அர்த்தம் எப்படி ஒரு வாழ்க்கையின் முடிவில் புரிகிறது என்பதன் கதை.
One Star.
Three Gifts.
One Mystery.
And one journey from Alpha to Omega.